Vaasthu Dates 2022 | Vaasthu Dates 2021 | Vaasthu Dates 2020 | Vaasthu Dates 2019
Vaasthu Sasthiram
எந்த ராசிக்கு, எந்த திசையில் அமைந்த வாசல் சரியாக அமைந்தால் நல்லது என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு கட்டிட அமைப்பு, நகர அமைப்பு எப்படி அமைக்க வேண்டும் என சொல்லும் ஒரு துறை. நாம் கட்டும் கட்டிடம் எதுவானாலும் நாம் புது தொழில் நுட்பத்தில் செய்தாலும் பழமையான அறிவியலான வேதம் சார்ந்த அறிவுத் துறையாக இந்த வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படும் ஒரு கட்டிடம் மிக சிறப்பான அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்[சான்று தேவை]. “வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
பொதுவாக வாஸ்து என்பது உலகளவில் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இங்கு நாம் என்ன வாஸ்து விதி சொல்கின்றோமோ, அதே தானே உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் வாஸ்து கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல நாட்டினர் வாஸ்து விதிகளை கடைப்பிடிப்பதில்லையே, அவர்கள் எப்படி சிறப்பாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழும்.
அதே போல் நாம் ஒரு வீட்டை காட்டுகின்றோம் அல்லது ஒரு வீட்டிற்கு குடிபோகின்றோம் என்றால் அந்த வீட்டின் வாசல் எந்த திசையில் உள்ளது என்பது பார்க்கின்றோம். அதில் குடும்ப தலைவனின் ராசி, நட்சத்திரத்தை பார்க்கின்றோம். ஆனால் மனைவியின் ராசி நட்சத்திரத்திற்கு ஒத்துவருமா என பார்ப்பதில்லை என்ற கேள்வி எழும்.
ஒரு வீட்டுக்கான வாஸ்து போடும் போது, கணவன் மட்டுமல்லாமல், மனைவிக்கான பூஜை போட வேண்டுமா? என்ற கேள்வி வரும் அதே போல் “கெட்டும், தெற்கு பார்த்த வீட்டிற்கு போகாதே” என்ற பழமொழி கூறுவதுண்டு.
வாஸ்து படி வீடு அமைத்தல்:
வடக்கு, கிழக்கு திசை பார்த்த வாசல் வைக்கும் போது வீட்டின் இடத்தை முழுவதுமாக சிறப்பாகப் பயன்படுத்த முடியும். ஆனால் தெற்கு, மேற்கு திசை பார்த்த வீடு, தொழிற்சாலை கட்டும் போது மனையை முழுவதும் பயன்படுத்த ஏதுவாக இருக்காது.
தெற்கு பார்த்த வாசல் வைக்கலாமா?
தெற்கு பார்த்து வாசல் வைப்பது தவறில்லை. ஆனால் அது எந்த திசையை ஒட்டி இருக்கின்றது என்பது மிக முக்கியம். தெற்கில் வாசல் வைக்கும் போது கிழக்கு திசையை ஒட்டி வைத்தால் உச்ச வாசல் என்கின்றோம். அதுவே மேற்கு திசையை ஒட்டி வைத்தால் அது சரியில்லாத வாசல் ஆகும்.
சிறப்பான வாஸ்து வாசல் வைப்பது எப்படி?
கிழக்கு வாசல்: கிழக்கு திசையில் வாசல் வைக்க வேண்டுமானால், அது வடக்கு திசையை ஒட்டி இருக்க வேண்டும்.
வடக்கு வாசல்: அதே போல் வடக்கு நோக்கி வாசல் வைத்தால் அது கிழக்கு திசையை ஒட்டி இருக்குமாறு வைக்க வேண்டும்.
தெற்கு வாசல்: தெற்கு திசை நோக்கி வாசல் வைக்க வேண்டுமானால், அது கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.
மேற்கு வாசல்: மேற்கு திசை நோக்கி வாசல் வைக்க விரும்புபவர்கள், அந்த வாசல் கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.
இப்படி வாசல் வைப்பதை உச்ச வாசல் என்கின்றோம்.
நாள், நட்சத்திரம் பார்த்து வைக்கலாமா?
ஒரு வீட்டில் 5-8 பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவருக்கும் சேர்த்து நாள், நட்சத்திரம் பார்த்து வீட்டின் வாசல் வைக்க முடியாது. வீட்டின் தலைவரான அப்பாவின் ராசி, நட்சத்திரத்தைப் பொருத்து வீட்டின் வாசல் வைக்க முடியாது. இதன் காரணமாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்ட அந்த உச்ச வாசல் பிரிவில் வாசலை அமைக்கலாம்.
ஏன் உச்ச வாசல் பகுதியில் வாசல் அமைப்பது அவசியம்?
உச்ச வாசல் பகுதியில் வாசல் அமைக்கும் பட்சத்தில் சூரிய ஒளி, நிலா வெளிச்சம், காற்று வீட்டில் வந்து செல்லும். இதை விட நாம் வசிக்கும் வீட்டில் சிறப்பான அம்சம் எது இருக்க முடியும்.
வாஸ்து பூஜையில் பெண் முக்கியமா ஆண் முக்கியமா?
பொதுவாக பூஜை செய்யும் போது பெண் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அவரின் ராசி, நட்சத்திரத்தைக் கருத்தில் கொண்டு பூஜைக்கான தேதி, நேரத்தில் பூஜை செய்வது நல்லது. அதே சமயம், அந்த நாள் ஆணின் நட்சத்திரத்திற்கு ஒத்து போகின்றதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது.இரண்டுமே சரியாக இருந்தால் அது ஆனந்தத்தை தரும்.
வாசலின் எண்ணிக்கை முக்கியம்:
தலை வாசல் ஒன்று என்றால் வெளியே செல்லக் கூடிய வாசலாக, 1,2,4,6,8 என இருக்கலாம். 3,5,7 எண்ணிக்கையில் வாசல் இருத்தல் கூடாது.