Karinaal Palangal

Karinaal Palangal

Karinaal Palangal (கரிநாள் பலன்கள்)

நம் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், அந்த நாள் நல்ல நாளா என்பதை நாள்காட்டியில் பார்த்துவிட்டு தான், சுப நிகழ்ச்சியை வைக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வோம். இந்த பழக்கம் பொதுவாக பல பேருக்கு உண்டு. அப்படி அந்த நாள் காட்டியில் Karinaal / கரிநாள் என்று இருந்தால், அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். இதை நம் அம்மா அப்பாவில் இருந்து, நாம் அனைவரும் இன்று வரை பின்பற்றி வருகின்றோம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

கரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் அதிகமாக விழுவதால் நம் உடலின் இயக்கமானது வழக்கத்திற்கு மாறாக செயல்படும். அதாவது ஹார்மோன்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் சுரக்கும். தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். இதனால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். சாதாரணமாக இருக்கும் போதே நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் வரும். இதனோடு வீட்டில் சுப விசேஷங்களையும் வைத்துக் கொண்டால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் அலைச்சல்களும், வேலைகளும் அதிகமாக இருக்கும். அந்த வேலைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற நம்முடைய மன அழுத்தமே நம்மை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி விடும்.

மனிதர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இதனால் விசேஷங்களில் பிரச்சினைகள் மேலோங்கும். சுப காரியம் என்பது நல்லது நடப்பதற்காக தானே! அந்த சுப காரியத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை அபசகுணமாக கருத மாட்டார்களா? இதன் காரணமாகவே கரிநாளில் நல்ல காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க உண்மையும் கூட.

இப்படி நமது நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ் மாத நாட்களில் மாறு படவே படாது. எல்லா வருடத்திற்கும் ஒரே தேதியில் தான் கரிநாட்கள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்கள் பின்வருமாறு. இந்த தேதிகளில் மாற்றம் இருக்காது. எல்லா வருடமும் இந்த தேதியில் தான் கரிநாட்கள் வரும்.

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19.​

இந்த நாட்களிலை குறித்து வைத்துக் கொண்டு, உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் இந்த தேதிகளில் முடிந்தவரை வைக்க வேண்டாம். ஆனால் தெய்வம் சம்பந்தப்பட்ட யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இவைகளையெல்லாம் இந்த தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *